கார் மோதி மாணவி பலி

கார் மோதி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-12-17 17:17 GMT
சிவகங்கை, 
சிவகங்கை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மகள் சுமித்ரா (வயது17). இவர் வாணியங்குடியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று மாலையில் சுமித்ரா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது மதுரை ரோடு சர்ச் அருகே, மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்