மண்டல பூஜை கொடியேற்றத்துடன் தொடக்கம்

ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;

Update: 2021-12-17 17:02 GMT
பனைக்குளம், 
ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில்போல் அமைக்கப்பட்ட வல்லபை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் மண்டல பூஜை விமர்சையாக கொண்டாடப்படாத நிலையில் நேற்று காலை மண்டல பூஜைக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய் தனர். 
முன்னதாக கோவில் தலைமை குரு மோகன் சுவாமி தலைமையில் கணபதி ஹோம அஷ்ட பிஷேகமும் நடை பெற்றது. பின்னர்  தங்க மூலாம் பூசப்பட்ட கொடிக் கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது.  நிகழ்ச்சியில் ராமநாத புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து மோகன் சுவாமி கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். 
இங்கு மண்டல பூஜையானது சபரிமலையில் நடக்கக்கூடிய பூஜை போல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. சிறப்பு பூஜைகள் 10 நாட்கள் நடைபெறும். வருகிற 26-ந் தேதி மண்டல பூஜை நடத்தப்பட்டு வல்லபை அய்யப்பனுக்கு ஆராட்டு விழாவுடன் அன்று காலை 10 மணி அளவில் கொடி இறக்கம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனையும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறும். 
இருமுடி கட்டு
31-ந் தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை இருமுடி கட்டுதல் நடைபெற்று அன்று இரவு 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அனைவரும் ஒன்றிணைந்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க யாத்திரை புறப்பாடு தொடங்கும். இந்த ஆண்டும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே ஆராட்டு விழா நடைபெற உள்ளது. 
இதில் கலந்து கொள்ளக்கூடிய பக்தர்கள் அனைவர்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். மண்டல பூஜை கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்