தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

Update: 2021-12-17 16:50 GMT
பொள்ளாச்சி

நேபாளத்தில் சர்வதேச அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் 7 நாடுகளை சேர்ந்த 1000 பேர் கலந்துகொண்டனர். இதில் இந்திய அணியின் சார்பில் பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கோகுலகிருஷ்ணன் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினார். மேலும் அவர் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ் தலைமை தாங்கினர். 

கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் கலந்துகொண்டு மாணவரை பாராட்டினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், புனிதன், அந்தோணிசாமி, சுகனேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் தேசிய யோகா போட்டியில் தங்கம் வென்ற கோகுலகிருஷ்ணன் தேசிய விளையாட்டு கவுன்சில் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இணைந்து ஆக்ராவில் நடத்தும் யோகா போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இந்த போட்டிகள் அடுத்த மாதம்(ஜனவரி) 8-ந் தேதி முதல் 25-ந்  தேதி வரை நடைபெறும் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்