வடமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்
வடமதுரை பகுதியில், ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகள் தயாராகி வருகின்றன.
வடமதுரை:

ஜல்லிக்கட்டு காளைகள்
தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி, கொசவபட்டி, மாரம்பாடி, நத்தம் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் வடமதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர்.
நீச்சல் பயிற்சி
இதுகுறித்து வடமதுரை அருகே செங்குளத்துபட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு குழு தலைவர் சோனைமுத்து கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காளைகளுக்கு உணவில் தொடங்கி பயிற்சி வரை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது காளைகள், காலை எடுக்கும் வேகம்தான் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடுவதற்கு உதவும்.
இதற்கு காளைகளுக்கு நல்ல மூச்சுப் பயிற்சி அவசியம். இதனால் காளைகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை நீச்சல் பயிற்சி அளிப்போம். இதுமட்டுமின்றி தினமும் நடைப்பயிற்சியும் அளித்து வருகிறோம். கூட்டமான மாடுபிடி வீரர்களை கண்டு மிரளாமல் இருக்க வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, கும்பலாக ஆட்களை நிறுத்தி காளைகள் தாவி ஓட பயிற்சி அளிக்கிறோம்.
காளையின் திமிலை பிடித்து அடக்க வரும் வீரர்களிடம் இருந்து உடலை லாவகமாகத் திருப்பி தப்பிக்க மண்ணை குத்தும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காளைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் முக்கியமானவை. பச்சரிசி, தேங்காய், பேரிச்சம்பழ கலவையும், உளுந்து மற்றும் பருத்தி கலவையும் உணவாக கொடுக்கப்படுகிறது. இது காளைகளின் உடல் திடமாகவும், கால்களை பலமாக்கவும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.