கருமத்தம்பட்டி
மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் சாம்பு கல்டர் (வயது 36). இவர் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சாம்பு கல்டர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான ரபின் சாகருடன் மோட்டார் சைக்கிளில் கணியூரை அடுத்த செல்லப்பம்பாளையம் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த லாரிக்கு வழிவிட மோட்டார் சைக்கிளை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சாம்பு கல்டர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.