என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை;

Update: 2021-12-17 15:48 GMT
என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை
கோவை

கோவை வரதராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 47). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் காவ்யாஸ்ரீ (19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இவருக்கு வாலிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.  இவரது காதல், ஜெகநாதனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மகளை கண்டித்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி ஜெகநாதன் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் காவ்யாஸ்ரீ மற்றும் அவரது தங்கை இருந்து உள்ளனர். 

இந்த நிலையில் காவ்யாஸ்ரீ தனது அறைக்குள் சென்று விட்டு கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை உடனே ஜெகநாதனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து அவர் விரைந்து வந்து கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உட்பக்கமாக மூடப்பட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தனர். அங்கு காவ்யா ஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். 

அவரது உடலை பார்த்து பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்