விபத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
விபத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
கூடலூர்
பெரியம்மா இறுதி சடங்கில் பங்கேற்க வந்தபோது விபத்தில் சிக்கி தனி யார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருிகறார்கள்.
இறுதி சடங்கு
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பீச்சனக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஜெச்சோ பாபு (வயது 24). இவர் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி கீச்சலூரில் வசித்து வந்த ஜெச்சோ பாபுவின் பெரியம்மா நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜெக்சோ பாபு விடுமுறை எடுத்துவிட்டு நேற்று அதிகாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு புறப்பட்டார்.
விபத்தில் சிக்கி பலி
அவர் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி.ஆர்.பஜார் அணைக்கட்டு அருகே ஒரு வளைவில் வந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெக்சோ பாபுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பைக்காரா போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெச்சோ பாபு வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெக்சோ பாபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடலூர் அருகே பெரியம்மா இறுதி சடங்குக்கு வந்தபோது விபத்தில் சிக்கி தனியார் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.