அச்சரப்பாக்கம், லத்தூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

அச்சரப்பாக்கம், லத்தூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-17 13:42 GMT
மக்கள் குறை தீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது. இந்த முகாமில் செங்கல்பட்டு மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான சுந்தர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி, அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கண்ணன், துணைத்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் வசந்தா கோகுலகண்ணன், மாலதி மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சசிகலா, மாலதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ் சுரேஷ் உள்பட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முருங்கை ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், முருங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலை் பள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முருங்கை ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மணவாளன், துணைத்தலைவர் மகாலட்சுமி சக்திவேல் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் அளித்தனர்.

லத்தூர் ஊராட்சி

லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. பனையூர் பாபு, மாவட்டக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், லத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுபலட்சுமி பாபு, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து உரையாற்றினார். பின்னர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராம மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, சாலைவசதி, குடிநீர் வசதி, முதியோர் ஓய்வூதியம் உட்பட கோரிக்கை மனுக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்