திருச்செந்தூரில் நடந்த பல்கலைக்கழக பெண்கள் டென்னிஸ் போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி சாதனை
திருச்செந்தூரில் நடைபெற்ற பல்கலைக்கழக பெண்கள் டென்னிஸ் போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளது
திருச்செந்தூர்:
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே பெண்களுக்கான டென்னிஸ் போட்டி, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேரி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போட்டியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடத்தையும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியில் கல்லூரி அணி 2-வது இடத்தையும், வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தனலட்சுமி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பேராசிரியர் நெல்சன் துரை நன்றி கூறினார்.
--