குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2021-12-17 12:57 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளியான காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவை சேர்ந்த ராஜசேகர் (வயது 27), தேவராஜ் (25) ஆகியோரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்