ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் வேனுடன் பறிமுதல் 3 பேர் கைது
ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் வேனுடன் பறிமுதல் 3 பேர் கைது
ஓசூர்:
ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் சாலையில் உள்ள நல்லூர் சோதனைச்சாவடி அருகில் வாகன சேதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 21 பைகளில் 726 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இதையடுத்து புகையிலை பொருட்கள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த புதுச்சேரி இந்திரா நகர் லாரன்ஸ் ரோட்டை சேர்ந்த வேன் டிரைவர் ஜெகதீஷ் (வயது 46), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (34), தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒபுளி நாயக்கனஅள்ளி அருகே அஸ்தகிரியூரை சேர்ந்த சென்னப்பன் (37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை
மேலும் சேலத்தை சேர்ந்த ஹரீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.