விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது
விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கனகமுட்லு அருகே உள்ள தண்ணீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பெரிய ராஜா (வயது 48). இவர் நேற்று முன்தினம் தன் வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பெரியராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட பெரியராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஓசூர் சிறையில் அடைக்கப்பட்டார்.