வீடுகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது

கடையம் அருகே வீடுகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-16 22:16 GMT
கடையம்:
கடையம் அருகே பொட்டல்புதூர் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சுல்தான் மகன் மீரான் மைதீன் (வயது 32). பொட்டல்புதூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் மகன் முகம்மது இசாக் (35). இவர்களது வீடுகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், மாதவன், ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த 2 வீடுகளிலும் மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், மீரான் மைதீன், முகம்மது இசாக் ஆகிய 2 பேரும் பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பதற்காக வீடுகளில் பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்