செங்கோட்டை-கொல்லம் ரெயில் ஆரியங்காவில் நிற்காததால் பயணிகள் அவதி
செங்கோட்டை-கொல்லம் ரெயில் ஆரியங்காவில் நிற்காததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.;
செங்கோட்டை:
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலையில் இயக்கப்படும் ரெயிலானது, பின்னர் செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு இயக்கப்படும் ரெயிலானது ஆரியங்காவு ரெயில் நிலையத்தில் நிற்காமல், நியூ ஆரியங்காவு ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
நியூ ஆரியங்காவு ரெயில் நிலையத்தில் இருந்து ஆரியங்காவு அய்யப்பன் கோவில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இதனால் அய்யப்ப பக்தர்கள் பெரிதும் அவதியடைந்தனர். எனவே செங்கோட்டை -கொல்லம் ெரயில் ஆரியங்காவு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.