பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
கடையநல்லூர் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தயாருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பசாமியை கைது செய்தனர்.