தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-12-16 21:31 GMT
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி ஆலோசனையின்பேரில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்று சுகாதார ஆய்வாளர் சாம்கர்ணல் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ், மணிகண்டன் மற்றும் பரப்புரையாளர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் பயன்பாட்டில் இருந்த சுமார் 50 கிலோ பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.3,600 வசூலிக்கப்பட்டது. மேலும் கடைக்காரர்களிடம் பாலித்தீன் பைகள் மற்றும் கப்புகளை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்