போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை சிவந்திபட்டி அருகே கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் (23). இவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகேசை கைது செய்தனர்.