குறைந்த நேர குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குறைந்த நேர குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-16 21:28 GMT
பெரம்பலூர்:

சாலை மறியல்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு சங்குப்பேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குழாய்களில் காவிரி குடிநீர் சுமார் 3 மணி நேரம் வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை அந்தப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் சங்குப்பேட்டை ரவுண்டானா பகுதிக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போதிய அளவு குடிநீர் வினியோகிக்க...
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதுமான அளவு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

மேலும் செய்திகள்