மணல் ஏற்றிச்சென்ற மாட்டு வண்டி பறிமுதல்
மணல் ஏற்றிச்சென்ற மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சு.ஆடுதுறை கிராமத்தில் மணல் ஏற்றிச்சென்ற மாட்டு வண்டியை மறித்தபோது, அதனை ஓட்டி வந்தவர் வண்டியை நிறுத்திவிட்டு, தப்பி ஓடி விட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த குமார்(வயது 35) என்பவர் அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய குமாரை தேடி வருகின்றனர்.