வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கரையிருப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் முருகன் (வயது 21). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.