இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

இரு சக்கர வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2021-12-16 20:34 GMT
ராஜபாளையம்,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36). இவர் சமையல் வேலை செய்து வந்தார். ராஜபாளையத்தில் உள்ள வேட்டை பெருமாள் கோவிலில் ஒரு நிகழ்ச்சியில் சமையல் வேலைக்காக வந்திருந்த கார்த்திகேயன் வேலை முடிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோதை நாச்சியார் புரம் விலக்கிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் காயமடைந்த கார்த்திகேயனை அருகில் உள்ளவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கார்த்திகேயனின் உறவினர் ராம்குமார் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்