மர்மமான முறையில் இறந்து கிடந்த பேராசிரியர்

அருப்புக்கோட்டையில் தனியார் விடுதியில் பேராசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2021-12-16 20:26 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி அரசகுளத்தை சேர்ந்தவர் முத்து (வயது 48). இவர்  தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய முத்து நேற்று காலை அறையை காலி செய்யும் நேரம் முடிந்தும் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் சென்று பார்த்தனர். அப்போது அறைகதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. கதவை தட்டி பார்த்து எந்த பதிலும் இல்லாததால் உள்ளே சென்று பார்த்தபோது முத்து வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேராசிரியர் முத்து தங்கி இருந்த அறையில் காலி மது பாட்டிலும், மாத்திரைகளும் கிடந்தன. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்