மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-12-16 18:47 GMT
களியக்காவிளை, 
களியக்காவிளை அருகே உள்ள பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குன்னத்துகால் குளத்தங்கரை வீட்டை சேர்ந்தவர் மனோஜ் (வயது30) பால் வெட்டும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அதிகாலையில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கிடந்த கல்லால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் மனோஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பளுகல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்