வேலூரில் சுதந்திரதின விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

சுதந்திரதின விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

Update: 2021-12-16 18:29 GMT
வேலூர்

75-வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் வகையில் சுதந்திர தின ஆண்டு அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ- மாணவிகளின் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. வேலூர் பெரியார் பூங்கா அருகே கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்