விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
திருவண்ணாமலை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை அருகில் உள்ள கானாலாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 52), தொழிலாளி.
இவர் குடும்ப பிரச்சினையால் 13-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.