கணவர் கொடுமை செய்ததால் விபரீத முடிவு இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கணவர் அடித்து உதைத்து கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாய் போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). இவர் திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் சீனிவாச தெருவைச் சேர்ந்த சரண்யா (26) என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், சக்திவேல் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் திருமணத்தின்போது சரண்யாவின் வீட்டார் நாகராஜூக்கு 20 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்களை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நாகராஜ் நகைகளை விற்று அதன் மூலம் தினமும் மதுகுடித்து வந்து மனைவி சரண்யாவை அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அவருக்கு உடந்தையாக அவரது தந்தை கோவிந்தசாமி, தாயார் முனியம்மாள் ஆகியோரும் சேர்ந்து சரண்யாவை கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில் கொடுமை தாங்க முடியாமல் தவித்து வந்த சரண்யா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது, திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சரண்யாவின் தாய் வெங்கட்டம்மாள் தன் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.