சேறும் சகதியுமான ரோடு சீரமைக்கப்படுமா

திருப்பூரில் சேறும், சகதியுமான ரோடு சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில்உள்ளனர்.

Update: 2021-12-16 17:20 GMT
திருப்பூர்
திருப்பூரில்  சேறும், சகதியுமான ரோடு சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில்உள்ளனர்.
சேறும், சகதியுமான ரோடு
திருப்பூர் காலேஜ் ரோட்டில் இருந்து சிறுபூலுவப்பட்டிக்கு செல்லும் ரோட்டில் எஸ்.பி.நகர் உள்ளது. இந்த ரோட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது இப்பகுதியில் பணி நிறைவடைந்த பின்னரும் தார் ரோடு அமைக்கப்படாமல் உள்ளது. 
இந்த நிலையில் ரோட்டின் ஒரு பகுதியில் குடி நீர் குழாயில் கசிவு இருப்பதால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது இங்கு மண்சாலையாக இது இருப்பதால் ரோடு முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் சேற்றில் தட்டுத்தடுமாறியபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து சென்றவண்ணம் உள்ளன. இதேபோல் கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன. இதனால் சேறும், சகதியுமாக உள்ள ரோடு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. 
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதேபோல் சேற்றில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது அருகில் நடந்து செல்லும் பொதுமக்களின் மீது சேறு பட்டு அவர்களின் ஆடைகள் அலங்கோலமாகின்றன. எனவே, இப்பகுதியில் தார் ரோடு போடுவதற்கும், குடிநீர் கசிவை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்