தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.;

Update: 2021-12-16 16:59 GMT
திண்டுக்கல்:
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

சாணார்பட்டி மாடர்ன்நகர் குடியிருப்பு பகுதி அருகே கணக்கன்குளம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த மழைகாரணமாக இந்த குளம் நிரம்பி வழிந்தது. அப்போது குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டது. மழை பெய்து பல நாட்கள் ஆகியும் இன்னும் அப்பகுதியில் மழைநீர் வழிந்தோடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலைச்செல்வம், சாணார்பட்டி.
பள்ளம், மேடாக காட்சியளிக்கும் சாலைகள்

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து பள்ளம், மேடாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யாசர் அராபத், திண்டுக்கல்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். எனவே காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சாலையில் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் மாணவர்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரசுமைதீன், வத்தலக்குண்டு.

பாதையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை உழவர் சந்தையின் நுழைவுவாயில் அருகே பாதையை ஆக்கிரமித்தபடி நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே பாதையை ஆக்கிரமிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜபிரபு, கம்பம்.

சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
தேனி அல்லிநகரம் பெரியார்நகரில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நித்தியானந்தம், அல்லிநகரம்.

மேலும் செய்திகள்