மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவன் கைது
17 வயது மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவன் கைது செய்யப்பட்டான்.
காரைக்குடி,
சிவகங்ைக மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 16 வயது சிறுவனும் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த சிறுமியை, அந்த மாணவன் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று உள்ளான். அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் 16 வயது மாணவனை கைது செய்தனர்.