மண் கடத்திய 3 பேர் கைது
நாசரேத் அருகே குளத்தில் இருந்து மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாசரேத்:
நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வைத்தியலிங்கபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டரில் குளத்தில் இருந்து மண் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை சோ்ந்த சுந்தர் (வயது 35), அம்பலசேரி பகுதியை சேர்ந்த சுடலைகண்ணன் (21), மனோகர் (25) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.