ரோட்டில் கிடந்த தங்க நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

ரோட்டில் கிடந்த தங்க நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

Update: 2021-12-16 15:15 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் பாபு வயது (வயது 47). இவர் கிணத்துக்கடவில் மேம்பாலத்தின்கீழே கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பழைய பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று மாலை இவர் ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி சென்றனர். அப்போது அவர்கள் சென்ற வாகனத்தில் இருந்து கீழே ஒரு சிறியடப்பா விழுந்தது. இதை கவனித்த ஆட்டோ டிரைவர் பாபு டப்பாவை எடுத்து திறந்து பார்த்தார். அதில் தங்க நகைகள் இருந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் பாபு போலீஸ் நிலையம் சென்று தங்க நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். கீழே கிடந்து எடுத்த நகையை கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பாபுவின் நேர்மையை போலீசார் பாராட்டினார்கள். 

இந்தநிலையில் சிறிது நேரத்தில் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி ரோட்டில் ஆயில் மில் பகுதியில் வசித்து வரும் கருப்புச்சாமி என்பவரது மனைவி காளீஸ்வரி (33). கிணத்துகடவு போலீஸ் நிலையம் வந்து தான் கிணத்துக்கடவு அடகுக் கடைக்கு சென்று நகைகளை அடகு வைத்து விட்டு மீதி 3/4 பவுன் தங்க நகைகளை ஒரு டப்பாவில் வைத்து இருசக்கரவாகனத்தில் சென்றபோது அது எங்கோ தவறிவிட்டது என்றார். 

இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் பாபு ஒப்படைத்த டப்பாவை திறந்து பார்த்தபோது அது காளீஸ்வரியின் தங்க நகை என்பது தெரியவந்தது. இதனையடுத்து காளீஸ்வரி ஆட்டோ டிரைவர் பாபுக்கும், போலீசாருக்கு நன்றி தெரிவித்து நகைகளை வாங்கிகொண்டு சென்றார்.

மேலும் செய்திகள்