மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
தேனி அருகே மோட்டார் ைசக்கிள் மோதி நடந்து சென்ற தொழிலாளி பலியாகினார்.
தேனி:
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் வயல்பட்டிக்கு கூலிவேலைக்கு சென்றுவிட்டு கொடுவிலார்பட்டிக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
கொடுவிலார்பட்டி-வயல்பட்டி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் வந்த போது, அதே சாலையில் கொடுவிலார்பட்டி வீரபாண்டி சாலையை சேர்ந்த பாலாஜி (35) மோட்டார் சைக்கிளில் வந்தார். இதில், முருகன் மீது அவர் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருடைய மகன் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாலாஜி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.