தர்மபுரியில் மாணவர்களை அடித்ததாக புகார் அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்

தர்மபுரி அருகே மாணவர்களை அடித்ததாக எழுந்த புகார் தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.;

Update: 2021-12-16 05:04 GMT
தர்மபுரி:
தர்மபுரி அருகே மாணவர்களை அடித்ததாக எழுந்த புகார் தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
ஆசிரியர் மீது புகார்
தர்மபுரி ஒட்டப்பட்டி அவ்வை நகர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக சதீஷ்குமார் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலரை சரியாக படிக்கவில்லை என்று அடித்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் இவர் வகுப்பறைகளில் மாணவர்களை சரியாக கையாளவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. 
பணி இடைநீக்கம்
அப்போது புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து ஆசிரியர் சதீஷ்குமாரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்