மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மிதந்தார்

கடையநல்லூர் அருகே மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மிதந்தார்.

Update: 2021-12-15 21:04 GMT
அச்சன்புதூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகத்தம்மாள் (வயது 80). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் பிள்ளைகளும் இல்லாததால் தம்பி மாடசாமியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகத்தம்மாள் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை கடையநல்லூர் அருகே உள்ள தனியார் கிணற்றில் ஆறுமுகத்தம்மாள் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சொக்கம்பட்டி போலீசார், ஆறுமுகத்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்