சிறுமி பாலியல் பலாத்காரம் என்ஜினீயர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் என்ஜினீயர் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சிவசந்திரன் (வயது 28), என்ஜினீயரிங் முடித்துவிட்டு செங்கல்சூளை நடத்தி வருகிறார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி வழக்கு பதிவு செய்து சிவசந்திரனை கைது செய்தார்.