வெவ்வேறு சம்பவங்களில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை

கடையம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-12-15 20:57 GMT
கடையம்:
கடையம் அருகே கீழாம்பூர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 17). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலமுருகன் கல்லூரிக்கு சரிவர செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாலமுருகன் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்குறிச்சி போலீசார் விரைந்து சென்று, பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குருவிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 65). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கிருஷ்ணசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்