வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
மத்திய அரசு லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள நிலையில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று விருதுநகரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்ரீ வெங்கடேஷ் தலைமையிலும், வங்கி ஊழியர் சங்க செயலாளர் ரமேஷ் முன்னிலையிலும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க செயலாளர் பவளவண்ணன், வங்கி ஊழியர் சம்மேளன கவுரவ ஆலோசகர் மாரிகனி ஆகியோர் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.