ஒரேநாளில் 2 இடங்களில் பணம் திருட்டு

அருப்புக்கோட்டையில் ஒரே நாளில் 2 இடங்களில் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-12-15 20:25 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் ஒரே நாளில் 2 இடங்களில் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். 
பணம் திருட்டு 
அருப்புக்கோட்டை காந்திநகர் அருகே சர்வீஸ் சாலையில் ராஜேஸ்கண்ணன் (வயது 33) என்பவருக்கு சொந்தமான பழைய கார்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. 
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது மேஜையின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. 
கைரேகை நிபுணர்கள்
இதேபோல் வி.வி.ஆர். காலனி அருகே சர்வீஸ் சாலையில் செல்வராஜ் (53) என்பவரின் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனத்திலும் பீரோவை உடைத்து அதில் இருந்த  ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்