பெண்ணை தாக்கியவர் கைது

மானூர் அருகே பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-15 20:15 GMT
மானூர்:
மானூர் அருகே உக்கிரன்கோட்டை பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் பால் அருள்ராஜ் (வயது 39). இவர் மாடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது மாடும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சொந்தமான மாடும் முட்டி சண்டையிட்டன. இதுதொடர்பாக பால் அருள்ராஜ் அந்த பெண்ணை கண்டித்தபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பால் அருள்ராஜ் அந்த பெண்ணை அவதூறாக பேசி, கன்னத்தில் கடித்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெண், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் அருள்ராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்