சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாரி மகள் பாப்பாத்தி (வயது 15). இவள் 8-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாள். இவளுக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட பாப்பாத்தி நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.