கம்பி குத்தியதில் வடமாநில தொழிலாளி சாவு
கம்பி குத்தியதில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இயாஜில் (வயது 29) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவரது உடலில் கம்பி குத்தியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.