தலைக்குப்புற ஜீப் கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிர் தப்பினர்

அரவக்குறிச்சி அருகே தலைக்குப்புற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக 7 பேர் உயிர் தப்பினர்.

Update: 2021-12-15 18:54 GMT
அரவக்குறிச்சி, 
தலைக்குப்புற ஜீப் கவிழ்ந்தது 
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). இவர் தனது தாய் பானுமதி (50), உறவினர்களான பரமசிவம் (50), நீலவேணி (50), அனுஷியா (27), தன்விகா (9), தர்சிகா (11) ஆகியோருடன் திருச்செந்தூருக்கு ஜீப்பில் சென்றுவிட்டு கரூருக்கு திரும்பி கொண்டிருந்தார். ஜீப்பை பிரகாஷ் ஓட்டினார்.
அரவக்குறிச்சி-ஆண்டிபட்டிகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக சென்று சாலையோரத்தின் இடது புறத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 
7 பேர் உயிர் தப்பினர்
இந்த விபத்தில் பானுமதிக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
மற்ற அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் செய்திகள்