போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நொய்யல்,
நொய்யல் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆவுடையார்பாறை பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (வயது 24) என்பவர் பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கவுரி சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.