விவசாயி உள்பட 2 பேர் சாவு

எஸ்.புதூர் அருகே ெவவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.;

Update: 2021-12-15 18:33 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து காட்டிற்கு சென்ற போது சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (55) ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தார். அவர் மணப்பாறையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல்சிகிச்சைக்காக திருச்சியில் அனுமதிக்கபட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். பழனிச்சாமி திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். 
எஸ்.புதூர் அருகே உள்ள பிரான்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைக்காளை (63). சம்பவத்தன்று இவர் புழுதிபட்டியிலிருந்து பிரான்பட்டிக்கு நடந்து சென்ற போது, தேனூர் விலக்கு அருகே அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) ஓட்டிய மோட்டார்சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் வெள்ளைக்காளை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து புழுதிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்