ஆன்லைனின் பாத்திரக்கடைக்காரர் இழந்த ரூ.10 ஆயிரம் மீட்பு

பாத்திரக்கடைக்காரர் இழந்த ரூ.10 ஆயிரம் மீட்பு;

Update:2021-12-15 23:56 IST
வேலூர்

வேலூர் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அமித்பஜாஜ் (வயது 40). பாத்திரக்கடை வைத்துள்ளார். கடந்த மாதம் ஆன்லைனின் பொருட்கள் விற்பனை செய்யும் இணைதளம் ஒன்றில் ஸ்டேஷனரி பொருட்களை வாங்க ரூ.10 ஆயிரத்து 489 செலுத்தினார். சில நாட்கள் ஆகியும் பொருட்கள் வரவில்லை. பின்னர் அமித்பஜாஜ் மீண்டும் அந்த இணையதளத்துக்கு சென்று ஆராய்ந்தபோது அந்த இணையதளம் போலியானது என்பது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இணையதள முகவரிக்கு சென்று இவரது கணக்கை முடக்கினர். மேலும் இவரது வங்கிக்கணக்குக்கு மீண்டும் பணத்தை வரவு வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பணம் மீட்கப்பட்டு மீண்டும் அமித்பஜாஜ் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதற்கான ரசீதை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, அவரிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்