முருங்கை ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்க பொதுமக்கள் கோரிக்கை

100 நாள் வேலை வழங்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2021-12-15 18:26 GMT
நெமிலி

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு பதிலாக 50 நாட்கள் மட்டுமே வேலை தரப்படுவதாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலுவிடம் பொதுமக்கள் அளித்த மனுவில் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை வழங்கவேண்டும் என கோரி்கை வைத்தனர்.

அதனை பரிசீலனை செய்த ஒன்றிய குழு தலைவர், பணிகளை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் 50 நாள் வீதம் 100 நாட்கள் பணி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் முருங்கை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து உள்ளதாகவும், ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை எனவும், முருங்கை ஊராட்சியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு காரணமாக வழி இல்லாமல் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்