சோளிங்கர் அருகே ஏரிகால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்
ஏரிகால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கல்பட்டு ஏரி கால்வாய் உள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழைமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
மேலும் ஏரி அருகில் உள்ள தடுப்பணை கால்வாய் பராமரிப்பு இன்றியும், ஆக்கிரமிப்பாலும் தண்ணீர் விவசாயித்திற்கு செல்லாமல் பெரிய கால்வாய் கரை உடைப்பு ஏற்பட்டு வெளியேறி வருகிறது. எனவே தடுப்பணை உடைப்பு மற்றும் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் நீர்பாசன வசதிபெற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.