மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை;

Update: 2021-12-15 18:25 GMT
ஆம்பூர்

மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாரதீய ஜனதா கட்சியினர் வடக்கு ஒன்றிய தலைவர் தேவநாதன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில்எதிருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்