திருப்பத்தூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Update: 2021-12-15 18:25 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஊராட்சியில் அங்காநாதீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பூஜைகள் முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்குகளையும் திருடிச் சென்றுள்ளனர். கோவில் கதவை தொட்டால் ஒலி எழுப்பும் அலாரத்தின் வயரை துண்டித்துள்ளனர்.

நேற்று காலையில் கோவிலை திறந்தபோது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடவியல் சோதனை செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்