எலிக்கு வைத்த மருந்தை சாப்பிட்ட 20 கோழிகள் சாவு

எலிக்கு வைத்த மருந்தை சாப்பிட்ட 20 கோழிகள் சாவு

Update: 2021-12-15 18:24 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் பாட்டன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் அண்ணாதுரை (வயது 32) விவசாயி. இவர் நாட்டு கோழிகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் இவரது வீட்டு அருகே பக்கத்து நிலத்துக்குகாரர் தனது நிலத்தில் வள்ளி கிழங்கு விவசாயம் செய்து வருகிறார். நிலத்தில் எலி தொல்லை அதிகமாக உள்ளதால் எலிகளை பிடிக்க பொறியில் மருந்து கலந்து நிலத்தில் வைத்து உள்ளார்.

அண்ணாதுரைக்கு சொந்தமான 20 நாட்டு கோழிகள் அந்த  மருந்தை சாப்பிட்டு மயங்கி விழந்து உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்ததும், நிலத்துக்காரரிடம் கேட்ட போது அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாதுரை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்